விஷால், ஆர்யா படத்துக்கு தமன் இசை

விஷால், ஆர்யா ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தமன். அதன் பிறகு அவர் இசையமைப்பதில் ஆர்வம் காட்டினார்.
தமிழில் சிந்தனை செய், ஈரம், மாஸ்கோவின் காவிரி, தில்லாலங்கடி, நாணயம், காதலில் சொதப்புவது எப்படி, சேட்டை, ஒஸ்தி, வாலு, பாக்மதி, காஞ்சனா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது ஆர்யா, விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு தமன் இசைமைக்கவுள்ளார். விஷால் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிந்தது. விரைவில் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுடன் ஆர்யா இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்துக்குத்தான் தற்போது தமன் இசையமைக்கிறார்.

Exit mobile version