அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஆஹா ஓஹோ என்று எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்…

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஆஹா ஓஹோ என்று எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. அதில் அதிமுகவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அதைபற்றி பலரும் பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் எப்படி நடந்தது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் அவர்கள் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை; கட்சியில் கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார்.

மேலும் அவர் சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை. ஒற்றுமையாக இருந்து, வரும் தேர்தலை சந்திக்க ஆலோசனை நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் என தலைமை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதிமுக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version