கணவர் ஜூம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தபோது நிர்வாணமாக வந்து நின்ற மனைவியால் பரபரப்பு…!!

கணவர் ஜூம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தபோது  நிர்வாணமாக வந்து நின்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது ஜூம் மீட்டிங் என்பது உலகம் முழுவதும் பிரபலமானது அதன் மூலம் இணையத்திலேயே அனைத்து கூட்டங்கள் கருத்தரங்குகள் வேலைகள் மற்றும் வகுப்புகள் நடத்துவது என்பது மக்களுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், ஜூம் அழைப்பில் நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தற்போது அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ள ஸோலிலே நடுவு மார்ச் 30  அன்று நடந்த கூட்டத்தில் கோவிட் – 19  இறப்புகள் குறித்து  தென்னாபிரிக்காவில் உள்ள 23 தலைவர்களுடன் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். அப்போது தீடிரென அவரது மனைவி நிர்வாணமாக அவருக்கு பின்னால் தோன்றியுள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் திடிரென சிரிக்க தொடங்கியுள்ளார். அந்த நேரத்தில் குழுத் தலைவரான பாசித் முத்தாம்பி தலையிட்டு “தலைவராக உங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் சரியாக ஆடை அணியவில்லை.

எங்களுக்கு எல்லாம் தெரிகிறது” என்று கூறி கூட்டத்தை இடைநிறுத்த தூண்டினார்.  “தயவு செய்து தலைவரே நீங்கள் ஒரு மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னீர்களா?” என்று கேட்டுள்ளார். “நாங்கள் உங்களுடன் சந்திக்க போதெல்லாம் இது போன்ற படங்களை நாங்கள் காண்கிறோம்”. நீங்கள் நேரலையில் இருக்கிறீர்கள் கவனமாக இருங்கள்.என்று கூறியுள்ளார்.  உடனே அவமானமாக உணர்ந்த நடுவு முகத்தை கைகளால் மூடி நான் மிகவும் வருந்துகிறேன் எனக்கு பின்னால் நடப்பதை கவனிக்கவில்லை நான் மிகவும் சங்கடப்படுகிறேன். என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

Exit mobile version