சிறுவன் பேஸ்புக் வீடியோவை பார்த்து தனக்குத்தானே செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்த சிவநாராயணன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு சிறுவன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பார்த்து உள்ளார். அதில் ஹேர் சலூன் வீடியோவில் சுருட்டை தலைமுடி உள்ளவரை எரிசாராயம் மற்றும் நெருப்பை பயன்படுத்தி முடியை நேராக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதைக் கண்ட சிவநாராயணன் தானும் அதுபோல் செய்து பார்க்க எண்ணி தனது தலையில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு நெருப்புக் குச்சி கொண்டு முடியை நேராக்க முயன்றுள்ளார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அறை முழுக்க பரவி அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநாராயணன் மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.