மீன்பாடி வண்டியில் மறுவீடு சென்ற மணமக்கள் அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வசிப்பவர்களுக்கு கழைக் கூத்தாடுவது, சர்க்கஸ் செய்வது இவர்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சன்னதி புதுக்குளத்தை சேர்ந்த சுப்பையா மகளான அம்சவல்லி என்பவருக்கும், மாரியப்பன் நகரை சேர்ந்த கணேஷ் என்பவருடைய மகனாகிய விஜய்க்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்கு 10 கிலோ மீட்டர் துரத்தினை மீன்பாடி வண்டியில் மணமக்கள் சென்றுள்ளார். மாப்பிள்ளை வீட்டார் கூறுகையில், பெண் வீட்டில் வரதட்சணை வாங்கமாட்டோம். எங்களால் முடிந்த நகையினைப் போட்டு திருமணம் செய்து வருவோம். ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் மறுவீட்டிற்கு அழைத்துச்சென்ற காலம் போய், தற்போது கார் மற்றும் குதிரை வண்டியில் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நாங்கள் எங்களது வசதிக்கு ஏற்ப மீன்பாடி வண்டியில் அமர்ந்து வருவதாகவும் இதுவே தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். மாப்பிள்ளை கூறுகையில், மாட்டுவண்டியிகை கையில் இழுத்து செல்வோம். தற்போது காலம் மாறியதால் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தும் மீன்பாடி வண்டியினை இவ்வாறு பயன்படுத்தி ஊர்வலம் சென்று வருகிறோம். இது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.