வீட்டிற்கு வந்த மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் செய்யும் காரியத்தை கண்டு இப்படியும் பழக்க வழக்கமா என ஆச்சிரியமடைந்துள்ளனர்.
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கங்களும் நவீன தொழில்நுட்பங்களும் அதிகமாகவே மாறிவருகின்றது. திருமணமாகி வீட்டிற்கு அழைத்து செல்லும் புதுமண தம்பதிகளுக்கு பாலும் பழமும் கொடுப்பதை வழக்கமாக நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். நம்மில் பலருக்குத் காரணம் தெரியாமல் இருக்கின்றது.
மணப்பெண்ணிற்கு பால் கொடுப்பது கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறான புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம். அந்த நேரங்களில் பெண்ணே ஒரு பசு மாடு எப்படி விஷத்தை உண்டாலும் அது தரும் பாலில் துளி கூட விஷம் ஏதோ அதுபோல கணவன் வீட்டார் உனக்கு தீமையைச் செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்கும் வழக்கமாகும்.
வாழைப்பழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூல மரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அதுபோல கணவனைச் சார்ந்து வம்ச விருத்தி அடைய நீ தர வேண்டும் என குறிக்க பழமும் தருவார். தற்போதைய காலத்தில் இருக்கும் நபர்கள் மாறாக செயல்பட்டு வருகின்றனர். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு பாலும், பழத்திற்கு பதிலாக பீர் கொடுத்துள்ள காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.