லாரி மீது மோதியதில் தீப்பற்றி எரிந்த பேருந்து… விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு!!

ராஜஸ்தான் பேருந்து விபத்து பிரதமர் இரங்கல்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

டெல்லி, ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர்-ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பயணிகள் பேருந்து மீது சரக்கு லாரி மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என ராஜஸ்தான் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் சுட்டுரையில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். பார்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பேருந்து டேங்கர் லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குரும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version