ஊராட்சி மன்றத் தலைவிக்கு அவமரியாதை- துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு…

கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை அவமதித்தது தொடர்பாக துணைத்தலைவர் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதைக்குறித்து அங்கு இருந்த ராஜேஸ்வரி அவர்கள் புவனகிரி போலீசாரிடம் வழக்கு பதிவு செய்தனர். மேலும் துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழங்கி விசாரித்து தார்[டொத்து தீர்ப்பளிக்க பட்டுள்ளது. இவர்கள் அளித்த புகாரின் அடிப்படியில் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Exit mobile version