நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் வீசியது அதனால் அங்குள்ள மரம் விழுந்தது வீடுகளில் இருந்த மதியழகன்(வயது 48), அவரது மகன் சஞ்சய்(18) மற்றும் பிரசாந்த்(23) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் சிகிச்சை அளிக்கபட்டனர்.
ராட்சத மரம் விழுந்ததில் 3 வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன. மேலும் தைலம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வந்த தற்காலிக ஷெட் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா மற்றும் சூட்டிங்மட்டம் பகுதியில் மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இங்கு தொடந்து காற்றுடன் கூடிய மழை பொழிதந்த் வருவதால் இரவு 9 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கூடலூரில் விடிய, விடிய சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நேற்று கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை, 27-வது மைல், நடுவட்டம், பைக்காரா உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகின்றது. மேலும் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இவ்வாறு நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குந்தா, கெத்தை, எமரால்டு, அப்பர் பவானி, காமராஜ் சாகர் போன்ற அணைகள் நிரம்பி காணப்படுகிறது. இந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.