24 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட லிஃப்ட்… ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

24 வருடங்களாக செயல்படாமல் இருந்த, மருத்துவமனை லிஃப்டில், மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ளது கைலி. இங்கு அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையின் ஒரு லிஃப்ட்1997 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்தது. இதனால் யாரும் அந்த பராமரிக்கப்படாத லிஃப்டை பயன்படுத்த வில்லை. அது பூட்டியே கிடந்தது.

இந்நிலையில் 24 வருடங்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி, ரிப்பேர் வேலைக்காக அந்தலிஃப்டை திறந்து பார்த்தனர். அப்போது, லிஃப்டுக்கு அடியில் மனித எலும்புக் கூடு ஒன்றுகிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த அவர்கள், அந்த எலும்புக் கூடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அது ஆண் எலும்புக்கூடு என்பது தெரியவந்துள்ளது.

அவர் யார்? தவறி விழுந்தாரா? உள்ளே மூச்சுத்திணறி இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து அவரை இங்கு கொண்டு போட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். அதோடு கடந்த 24 வருடங்களில் அந்தப் பகுதியில் யாரும் காணாமல் போயிருக் கிறார்களா என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version