கள்ளக்காதலுக்கு இடையூறு கணவர் அடித்துக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே, மேலப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை. மனைவி கலையரசி. இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்காளை கேரளாவில் சமையல் வேலை பார்த்து வந்தார். கலையரசிக்கு, அதே கிராமத்தை சேர்ந்த சேதுபதியுடன் (33) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த முத்துக்காளை மனைவியை கண்டித்தார். இதனால், கடந்த மாதம் பெற்றோர் இருக்கும் தேனி அருகே உள்ள தர்மபுரி கிராமத்தில் கலையரசி கணவருடன் குடியேறினார்.
கடந்த 3ம் தேதி மேலப்பட்டிக்கு வருவதாக தனது அண்ணன் ஈஸ்வரனிடம் தெரிவித்த முத்துக்காளை, அங்கு செல்லவில்லை. சந்தேகமடைந்த ஈஸ்வரன் கலையரசியிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர், ‘இருவரும் மேலப்பட்டிக்கு கிளம்பியதாகவும், அப்போது தகராறு ஏற்பட்டு முத்துக்காளை கோபித்துக்கொண்டு சென்றதாகவும்’ தெரிவித்தார். இதையடுத்து தம்பியை காணவில்லை என வீரபாண்டி போலீசில் ஈஸ்வரன் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி – காமாட்சிபுரம் சாலையில் ஓடைப்பட்டி அருகே, தோட்டத்து கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் சென்று பார்த்தபோது மிதந்தது முத்துக்காளையின் உடல் என தெரிந்தது. வீரபாண்டி மற்றும் ஓடைப்பட்டி போலீசார், தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டதனர். கொலையை ஒப்புக்கொண்ட மனைவி: சந்தேகமடைந்த வீரபாண்டி போலீசார் கலையரசியை பிடித்து விசாரித்தனர்.