பெற்ற மகளையே கொலை செய்த தலையுடன் வந்த தந்தை அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், ஹார்டோய் மாவட்டம் பாண் டேதாரா கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஷ்குமார் இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 17 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் சரத்குமாரின் மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
மகளின் காதல் விஷயத்தை அறிந்த சர்வேஷ்குமார் மகளை எச்சரித்துள்ளார். ஆனாலும், அவரது மகள் காதலை தொடர்ந்துள்ளார் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவரது மகள் காதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மகளை கொலை செய்துள்ளார்.
மகளை கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையோடு எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சர்வேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .