அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இன்று முதல் விமான சேவை

இந்தியாவில் இருந்து இன்று முதல், அமெரிக்காவுக்கு விமான சேவை தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த, மார்ச், 23 முதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ‘வந்தேபாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியரை அழைத்து வர, சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. இந்நிலையில், மே,25ந் தேதி முதல், உள்நாட்டு விமான போக்குவரத்து, சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட, சர்வதேச விமான போக்குவரத்து நாளை தொடங்க உள்ளது.

இது குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இடையேயான விமான சேவையை, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தொடங்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம், 17ந் தேதி முதல்-31ந் தேதி வரை, அமெரிக்காவிற்கு, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், 18 விமான சேவைகளை மேற்கொள்ள உள்ளது.

டெல்லி – நெவார்க் இடையே, தினசரி சேவையும், டெல்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே, வாரம் மூன்று முறையும் விமான போக்குவரத்து மேற்கொள்ளப்படும். ஏர் பிரான்ஸ் நிறுவனம், இம்மாதம் 18ந் தேதி முதல் – ஆக.,1 வரை, 28 விமான சேவைகளை வழங்க உள்ளது.

Exit mobile version