கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அவர் பல சர்ச்சைகளில் சிக்கி சிதராமல் வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது கைலாசா என்ற நாட்டை தனெக்கென உருவாக்கி கொண்டதாக கூறினார். ஆனால் அந்த நாட்டை பற்றிய எந்த தகவலும் இன்றளவில் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் தினம் ஒரு வீடியோ என வெளியிட்டு அவரின் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துவந்தார். இப்படி சென்று கொண்டு இருக்கையில் திடிரென்று கைலாசாவிற்கு என தனி வங்கியும் அந்த நாட்டிற்கு என ஒரு தனி காசும் அச்சடிக்கபோவதாக கூறினார். அவர் அவ்வாறு கூறிய கனமே, மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதிக்க வேண்டும், விவசாயம் செய்ய நிலம் வேண்டும், துணிக் கடை வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் அடுத்தடுத்து கோரிக்கைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர்.
அவற்றுக்கு ரியாக்ட் செய்த நித்யானந்தா, அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு தனது கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். அதற்கு பின்னரும் அவரின் பக்தர்கள் மேலும் மேலும் கோரிக்கையை பெரிதாக்கி கொண்டே இருக்கின்றனர். இப்போது புதிதாக கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி வேண்டும் என மதுரையின் ’வீர மரபு வீர விளையாட்டுக் கழகம்’ எனும் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நித்யானந்தா, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும் அவரின் கைலாசா நாட்டில் நோய் தொற்று இல்லாததால் ஜல்லிகட்டு நடத்த உத்தரவு தரகோரி கடிதம் விடுத்துள்ளார்.