கடைசி நொடியில் பிரேக்அப் செய்த காதலன் : காதலி செய்த திடீர் முடிவு

கடைசி நொடியில் காதலன் பிரேக்அப் செய்ததால் காதலி திடீர் முடிவு செய்தார்.

தன்னைத் தானே விரும்புவர்கள் மட்டுமே மற்றவர்கள் மீது அன்பு செலுத்த முடியும். ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண், தன் மீது வைத்துக்கொண்ட அன்பு அளவுக்கு மீறியதால் என்னவோ தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜியா பகுதியில் வசித்து வரும் மெக் டெய்லர் மோரிசன் (Meg Taylor Morrison) என்ற பெண், தன் காதலருடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வந்துள்ளார். கொலராடோ டென்வரில் திருமண ஹால், கேக், விருந்தினர்களுக்கு உணவு என அனைத்துக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இருவருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த வருத்தம் அவர்களின் திருமணத்திலும் எதிரொலித்தது. அதாவது, திருமணத்துக்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவாக இருந்த நேரத்தில் மெக் டெய்லர் மோரிசனின் காதலர், அவரை பிரேக் அப் செய்துவிட்டு சென்றுள்ளார்.

மன வருத்தத்தில் இருந்த மெக் டெயலர், திருமணத்துக்கு செய்த ஏற்பாடுகளை எதையும் ரத்து செய்யவில்லை. மாறாக, கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்துக்கொண்ட அவர், திட்டமிடப்பட்ட தேதியில் அவரையே அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இந்த முடிவுக்குப் பிறகு திருமணத்துக்கான புதிய உடை மற்றும் வித்தியாசமான கேக் மற்றும் டைமண்ட் மோதிரம் என புதிதாக ஆர்டர் செய்து, தன்னைத் தானே திருமணமும் செய்துகொண்டார். மெக் டெய்லரின் முடிவுக்கு முதலில் அவரது தாய் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமிரின் உச்சத்தில் இருந்து கொண்டு தான் இப்படி செய்வதாக அவர்கள் நினைப்பார்கள் என மேக் டெயலர் நினைத்துள்ளார்.

பல கட்ட யோசனைகளுக்குப் பிறகு தனக்கு துணையாக யாரும் வேண்டாம் என முடிவெடுத்த மேக் டெய்லர், தன்னை தானே திருமணம் செய்து கொள்வது என்ற முடிவை தீர்க்கமாக எடுத்துள்ளார். கடந்த ஆண்டில் பிரேசிலில் டியாகோ என்பவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், காதலி திடீரென பிரேக் அப் செய்துவிட்டு சென்றுள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற டியாகோ, திருமண ஏற்பாடுகளை ரத்து செய்யாமல் தன்னை தானே திருமணம் செய்துகொண்டார்.

Exit mobile version