கால்பந்துடன் மூன்வாக் செய்த கயானா இளைஞர் சாதனை செய்துள்ளார்.
கயானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்வாக்கைக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கால்பந்தை தலையில் வைத்தவாறு அவர் செய்யும் மூன்வாக் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரின் அசாத்திய திறமையை கின்னஸ் குழுவும் அங்கீகரித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவைச் சேர்ந்தவர் அபுபக்கர் தரூர் (Aboubacar Traore). நடனத்தில் தேர்ந்த கலைஞராக இருக்கும் அவர், தன்னுடைய நடன வீடியோக்களை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், கடந்த 2019ம் ஆண்டு சாண்டியாகோ நகரில் கால்பந்து ஒன்றை தலையில் வைத்தவாறு, சுமார் 32 ஸ்டெப்ஸ் மூன்வாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் கால்பந்தைக் கொண்டு அவர் செய்யும் ஒவ்வொரு மூவ்களும், பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.
இதனை சாதனையாக அங்கீகரித்த கின்னஸ் குழு, அபுபக்கரின் பிரபலமான கின்னஸ் மூன்வாக் வீடியோவை தன்னுடைய சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போதும் பல லைக்ஸ்களும், பார்வைகளையும் குவித்து வருகிறது. அண்மையில் சமூகவலைதளங்களில் பரவிய மற்றொரு வீடியோவில், இந்தியாவைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், மதுபோதையில் மூன்வாக் செய்திருந்தார். இந்த வீடியோவை ரசித்த நெட்டிசன்கள், இதுபோன்ற பலரின் திறமைகள் வெளியுலகுக்குக் தெரியாமலேயே இருப்பதாகவும், சமூகவலைதளங்களின் உதவியால் அவை தற்போது வெளிச்சத்துக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளனர்.