மனைவி தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என கணவன் எதிர்பார்க்கக்கூடாது : உயர்நீதிமன்றம் கருத்து

மனைவி தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என கணவன் எதிர்பார்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டீ போட்டு கொடுக்காததால் கணவன் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மொஹைத் தேரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகள் சாதாரணமானவை அல்ல இம்மாதிரியான கொலை சம்பவங்களால் சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு கட்டமைக்கப்படுகிறது

மனைவி என்பவள் ஒரு பொருளோ அல்லது உங்களின் தனிப்பட்ட உரிமையும் கிடையாது. அவளும் உங்களை போல ஒரு உயிர்தான் ஆண்-பெண் பணிகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. மனைவி என்பதாலேயே அவர் அனைத்து எழுத்துகளையும் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்க்கிறார் அப்படியான எண்ணம் மிகவும் தவறானது அவ்வாறு மனைவியுடன் எதிர்பார்க்க கூடாது என கூறிய நீதிமன்றம் கொலை செய்த நபர் ஜாமீன் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அவர் கொலையாளி என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என கருதப்படுகிறது.

Exit mobile version