ஊடகத்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை – முத்தரசன் வலியுறுத்தல்…

ஊடகத்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகத்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பத்திரிகையாளர் கொலை
செய்தியாளர் மோசஸ் சட்ட விரோதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மோசஸ், அந்தப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வது ஆகிய சமூக விரோதச் செயல்கள் குறித்து அண்மையில் ஆதாரபூர்வமாக தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டார்.

கைது செய்க
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோதக் கும்பல்கள் கூட்டுச் சேர்ந்து செய்தியாளர் மோசஸைக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளன. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
அரசின் கடமை
ஊடகத் துறையின் சுதந்திரத்தையும், அதில் பணிபுரிகிற செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நிழற்பட நிருபர்கள் அனைவரையும் பாதுகாப்பது அரசின் கடமைப் பொறுப்பாகும். மோசஸ் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கிப் பாதுகாக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசை இந்தியக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version