மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது…

போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடியை மாற்றம் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை கோனேரிராஜபுரத்தில் எனும் பகுதியில் ஒரு ரவுடி போலீசையே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ரவுடியை எப்படியாவது பிடித்தாகவேண்டும் என காவல் துறையை சேர்ந்த அனைவரும் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் போலீசை அரிவாளால் வெட்டிய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனேரிராஜபுரத்தில் கடைவீதியில் அரிவாளை காட்டி மிரட்டியதை போலீசார் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசாரை அவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் தலைமை காவலர் அன்பழகன் காயமடைந்தார்.

அந்த ரவுடி கலைவாணன் பேரில் ஏற்கனவே மீது 5 கொலை, 4 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version