நமது விவசாயத் துறை, விவசாயிகள் மற்றும் கிராமங்கள் ஆகியவை சுயசார்பு பாரதத்தின் ஆதாரங்கள் என பிரதமர் மோடி பேசினார்.

விவசாயர்கள் தான் தன்னிறைவு இந்தியவை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் சேவை சட்டத்தில் இருந்து பழங்கள், காய்கறிகள் நீக்கப்பட்டதால், ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளார்கள். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் பெரியளவில் பயன்பெறுவார்கள்.
நிலத்தில் கால் வைத்துவிட்டால் அவர்களை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அவர்கள் இந்த கொரோன தொற்றின்போதும் ஓயாமல் வேலை செய்பவர்கள். தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு அமைப்பு மூலம் வாழை, காய்கறிகள் கொள்முதல் செய்தனர். வாழை முதலவரை கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொரோன மூலம் அவர்களின் குடும்பத்தின் இடையிலான பிணைப்பு அதிகமாகி உள்ளது.