ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய், சேய் மரணமடைந்ததையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அர்ச்சனா என்னும் நபர். இவர் நிறைமாத கர்ப்பிணி இவருக்கு பிரசவ வள்ளி ஏற்பட்டு இவரை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதையடுத்து நள்ளிரவில் பிரசவித்த தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் கேள்வி பட்டு சம்பவ இடத்திற்கு விரைட்னது சென்ற அர்ச்சனா ஆகியோரின் உறவினர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகை இட்டனர். மேலும் இவர்கள் அங்கு மருத்துவர் இல்லாததால் செவிலியர் மற்றும் ஊழியர்கள் பிரசவம் பார்த்ததால் இவர்கள் மறைத்திருக்க கூடும் என கூறி வருகின்றனர்.
மேலும் அவர்கள் அர்ச்சனாவின் குழந்தையின் சடலத்துடன் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து எம்எல்ஏ ஆர்.காந்தி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.