மாவட்ட நிர்வாகம் கண்டிப்பான அறிவிப்பு-வேளாங்கண்ணியை பார்க்ககூடாது

வேளாங்கண்ணியை பார்க்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

மிழகத்தில் இன்றுடன் பொதுமுடக்கம் தளர்க்கப்பட்டு வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட்டுள்ளன். இந்நிலையில் பக்தர்கள் ஆரவாரமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இப்படி எல்லா பிரபல ஆலயங்கள் முழுவதும் திறக்கப்பட்ட நிலையில். வேளாங்கண்ணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பக்தர்கள் வரக்கூடும் என்பதால் திருவிழா முடியும்வரை வேளாங்கண்ணி தேவாலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 29 தேதி கொடி ஏற்றும் விழாவிலும் நிர்வாகத்தினர் 30 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. திருவிழா காரணமாக வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. செப்டம்பர் 7-ம் தேதி திருத்தேர் பவனியும், 8-ம் தேதி கொடியிறக்கமும் நடைபெற உள்ள நிலையில், திருவிழா முடியும் வரை வேளாங்கண்ணியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி கோவிலில் நாகை மாவட்டமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட்டம் வருவதுண்டு. ஆனால் இந்த கொரோனா தொற்றால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகையைத் தவிர்ப்பதற்காக நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாரால் கண்காணிக்கப்படுகிறது. செப்டம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் பக்தர்கள் யாருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படாது என்றும் வேளாங்கண்ணி கடற்கரைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றும் வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகள் செப்டம்பர் 8-ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு மட்டும் சிறிய தள்ளுபடி. அவர்கள் மட்டும் அவர்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே சென்று வரலாம்.

Exit mobile version