லாரியில் 30 கி.மீ தொங்கிச் சென்ற நபர் : அதிர்ச்சி சம்பவம்…!!

லாரியில் 30 கி.மீ தொங்கிச் சென்ற நபர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் பயணித்த அந்த பெண்ணின் கணவர் விபத்தை ஏற்படுத்திய லாரியின் கதவை பிடித்தவாறு சுமார் 30 கிலோ மீட்டர் பயணித்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் டேங்கர் லாரியின் கதவை பிடித்தவாறு தொங்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. தெற்கு பிரேசிலில் கஞ்சா போதையில் லாரியை தாறுமாறாக இயக்கிய நபர் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதில், அந்த வாகனத்தில் இருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 49 வயதான அன்டோனியா பெரிரா மற்றும் அவரது மனைவி சான்ட்ராவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, கஞ்சா போதையில் லாரியை தாறுமாறாக இயக்கிய லாரி ஓட்டுநர், முன்னாள் சென்றுகொண்டிருந்த அன்டோனியா பெரிரா இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பெரிராவின் மனைவி சான்ட்ராவை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் பலத்த காயம் காரணமாக அவர் மரணமடைந்தார்.

பெரிரா, விபத்து ஏற்பட்டபோது நிலைதடுமாறிய நிலையில் லாரியின் கதவை பிடித்தவாறு தொங்கியுள்ளார். அதனைப் பார்த்த லாரி ஓட்டுநர், கொஞ்சமும் இரக்கப்படாமல் வேகமாக தொடர்ந்து லாரியை இயக்கியுள்ளார். சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு லாரியை அவர் நிறுத்தாமல் இயக்கியுள்ளார். பெரிராவின் அலறல் சத்த்ததைக் கேட்டு சாலையில் சென்றவர்கள் கூச்சலிட்டும் லாரி ஓட்டுநர், வண்டியை நிறுத்தவில்லை. ஒருவழியாக பலரின் முயற்சிகளுக்குப் பிறகு லாரியை அந்த நபர் நிறுத்தியுள்ளார். உடனடியாக, பெரிரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். லாரி ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், கஞ்சா போதையில் அந்த நபர் லாரியை இயக்கியதாக தெரிவித்தனர்.

கொலை மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லாரி ஓட்டுநர் மீது காவல்துறயினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, பெரிரா லாரியின் கதவில் தொங்கியவாறு கதறும் வீடியோ அந்தநாட்டு சமூகவலைதளங்களில் வைரலானது.

Exit mobile version