அரபிக் கடலில் விழுந்த கடற்படை பயிற்சி விமானம்- பைலட்டை தேடும் பணி தீவிரம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்திய கடற்படையின் பயிற்சி விமானமான மிக்-29கே ரக விமானத்தில் நேற்று பைலட்டுகள் அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து விமானத்தில் பயணித்த ஒரு பைலட் மீட்கப்பட்டதாகவும், மற்றொரு பைலட்டை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கடற்படை கூறி உள்ளது.

மேலும் இந்திய கடற்படையின் கோவா தளத்தில் 40 மிக்-29 கே ரக போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலிலிருந்து இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version