பேரறிவாளன், முருகன் இனிமேல் ஒன்றாக இருக்க முடியாது – உயர் நீதி மன்றம்

பேரறிவாளன், முருகன் ஆகியோரை ஒரே சிறையில் அடைக்க முடியாது- உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல்.

நளினி மற்றும் அவரது கணவர் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி குலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க நளினியின் தாயார் அவர்களுக்கு வேலூர் சிறையில் பாதுகாப்பு இல்லை என்றும் அவர்களை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் தான் தாக்கல் செய்த மனுவில், வேலூர் சிறையில் இருக்கும் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகியோரை புழல் சிறைக்கு மாற்றக்கோரி ஏற்கெனவே நளினி அளித்த மனுகரோனா சூழலால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

ஏற்கனவே இவர்கள் அளித்த மனுவில் பேரறிவாளனுக்கு முருகனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததால் இவர்களை ஒரே சிறையில் அடைக்க முடியாது. ஒருவேளை முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை ஒரே சிறையில் அடைத்தால் அது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஏற்கெனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதனால் நளினி மற்றும் அவரது கணவரான முருகனை புழல் சிறைக்கு மாற்ற கூறிய மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

Exit mobile version