கோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி

கோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி நடந்ததை அடுத்து ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடவடிக்கை நடத்தியதில் உரிமையாளர்கள் கைது.

கோவை ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தின் இன்வாய்ஸ் பில், வே பில் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் பொருட்கள் சப்ளை செய்யாமல் அதில் போலி ராசுதால் மட்டும் போலி ஆவணங்களை பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற போலி ஆவணங்களை உபயோகப்படுத்தி இந்த கடையின் உரிமையாளர் சம்பத்குமார் அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் போலி ரசீதுகளை பயன்படுத்தி 9.7 கோடி ஜிஎஸ்டி வரிச்சலுகை பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அவர் மீது முறைகேடு, மோசடி வழக்குகளை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சம்பத்குமார் கைது செய்யப்பட்டார். ‘‘போலி ரசீது, ஆவணங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்யக்கூடாது. இதை மீறி செய்யும் நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜி.எஸ்.டி. செலுத்தி முறையாக தொழில், வணிகம், வர்த்தகம் செய்யவேண்டும்’’ எனவும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version