பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாலியல் வன்கொடுமை
திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி கடந்த 2019ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வருடமாக நடந்த வழக்கின் இறுதியில், குற்றவாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் சிறுமிகளை வன்புணர்வு மற்றும் கூட்டு வன்புணர்வு செய்து கொலைசெய்யும் படுபாதகச் செயல் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது.
மரண தண்டனை
அரசு சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். இந்த வன்கொடுமைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையாக மரண தண்டனையை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.