நிவர் புயலால் வட சென்னை கடற்கரையில் புது பிசினஸ்

நிவர் புயலால் வாடா சென்னை கடற்கரை பகுதியில் நிலக்கரி எடுக்கும் தொழில் நடந்து வருகிறது.

நிவர் புயலானாது தன் சீற்றத்தை காட்டிவிட்டு இரண்டு நாட்கள் கழித்து புதுச்சேரி வழியாக கரையை கடந்து சென்றது. நிவர் புயலின் அபாயத்தை தடுக்க பல முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் காரணமாக அதிகளவில் பொருள் சேதமும், உயிர் சேதமும் இல்லாமல் தப்பித்தது தமிழகம். இந்நிலையில் கடலில் இருந்து நிலக்கரி துண்டுகள் கரை ஒதுங்கி உள்ளது.

இன்று நிவர் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் தற்போது கடலில் வீசி எறியப்பட்ட நிலக்கரிகள் வடசென்னை பகுதியில் உள்ள காசிமேடு கடலில் வந்து கரை ஒதுங்கி உள்ளது. இதனை கண்ட வடசென்னை பகுதி மக்கள் அதை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலக்கரி துண்டானது நிவர் புயலின் போது சென்னை துறை முகம் மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் காற்று வீசியதால் அங்கு அனல் மின் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலக்கரி துண்டுகள் காற்றில் பறந்து கடலில் வீழ்ந்தது.

இந்த கரிதுண்டுகள் தற்போது காசிமேடு, நாகரத்தோட்டம், புது வண்ணாரப்பேட்டை, சூரியநாராயண சாலை கடல் பகுதிகளில் ஏராளமாக குவியல் குவியலாக கிடைக்கின்றது.

Exit mobile version