கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு உணவகத்தில் 20 % தள்ளுபடி

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு உணவகத்தில் 20 % தள்ளுபடி சலுகைகள் வழங்கியுள்ளது.

கொரோனாவுக்கு முடிவு கட்டும் நோக்கில் உலகம் முழுக்க தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 1 கோடியே சுமார் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ள கேட்ஸ் ஹாஸ்பிடாலிடி உணவகத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பில்லில் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து இந்த உணவகத்தில் கூட்டம் களைகட்டியுள்ளது. உணவருந்த வரும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி பெற வேண்டுமெனில் தடுப்பூசி போட்டதற்கான ஆவணத்தை காட்ட வேண்டும். இதுபோன்ற சலுகைகளுக்கு ஏராளமானோர் வரவேற்பு அளித்துள்ளனர்.

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இருந்தாலும், சுற்றுலா, உணவகங்கள் உள்ளிட்ட சேவைகள் இன்னும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. எனினும், மாஸ்க், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் துபாயில் உள்ள சில உணவகங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்குகின்றன.

Exit mobile version