‘தி ராக்’ குடும்பத்திற்கு கொரோனா பாதிப்பு : வீடியோ வெளியிட்டார்

ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும், அமெரிக்க நடிகருமான ராக் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தி ராக் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டுவெயின் ஜான்சன், ‘ஜுமான்ஜி’, ‘தி பாஸ்ட் அண்ட் தி பியூரியஸ்'(The Fast and The Furious) போன்ற பல படங்களில் தனது நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது சாகசங்களாலும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கும், எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு 3 வாரம் ஆகிறது. எங்கள் குழந்தைகளுக்கு லேசான அறிகுறியாக உள்ளது. நாங்கள் தற்போது நலமாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட செய்தி

நான் பல தனித்துவமான சவால்களை எனது கடந்த காலத்தில் சந்தித்துள்ளேன். இதில் இருந்து விரைவில் குணமடைவோம்.

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். மிக கவனமுடன் செயல்படுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version