ஷாம்பு உலகில் புகழ்பெற்ற ராஜ்குமார் காலமானார்…

ஷாம்பு உலகில் புகழ்பெற்ற டாக்டர் சி.கே.ராஜ்குமார் காலமானார். அவருக்கு வயது 68.

கெவின் கேர் நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதனின் சகோதரரும், சுஜாதா பயோ டெக் ஆய்வகத்தை நிறுவியவருமான சி.கே.ராஜ்குமார். இவர் 1980ம் ஆண்டு இவர் முதன் முதலில் வெல்வெட் ஷாம்பு என்ற ஒன்றை சிறிய பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்து வந்தார். பின்னர் அது நல்ல வருமானத்தை பெற்றது அதை தொடர்ந்து அவரின் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

மேலும் இவர் ஷாம்பு வர்த்தகத்தில் சாஷே பாக்கெட்டின் மூலம் புரட்சி ஏற்படுத்தி, உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பியவர். வெல்வெட் ஷாம்பு, நிவாரன் 90, மெமரி பிளஸ் ஆகியவை அவரது நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். சாஷேக்கள் மூலம் அணைத்து சாமான்ய மக்களையும் சென்று அடைந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

Exit mobile version