ஜூம் மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்த கணவன் எதிர்பாராமல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம் : வைரல் வீடியோ

ஜூம் மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்த கணவன் எதிர்பாராமல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம் வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

கொரோனா காரணமாக பலரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றனர். தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால் மூலமாக நடைபெற்றது.

ஆன்லைன் மூலம் நடைபெறும் சந்திப்புகளில் சில தவறுகளும் நகைச்சுவைகளை அறியாமல் நடக்கத் தவறியதுமில்லை அப்படி ஏதேனும் நிகழ்வு நடைபெறும்போது  உலக அளவில் வைரலாகி கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் நபரொருவர் ஜூம் வீடியோ கால் மூலம் தனது தொழில் தொடர்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் அருகே வரும் அவரது மனைவி அவரை முத்தமிட முயற்சி செய்கிறார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் அதிர்ச்சி அடைந்த நிலையில் கோபத்துடன் மனைவியிடம் “முட்டாள்தனமாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருக்கிறேன்” என கோபத்துடன் கூறுகிறார் இருந்தபோதும் அந்த மனைவி ஒன்றும் பேசாமல் சிரித்துக்கொண்டே இருக்கிறார். இதுதொடர்பான வீடியோவை பிரபல தொழிலதிபர் ஹரிஷ்  கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையான ஜூம் கால் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version