ரோட்டில் சென்ற காரின் மீது மோதிய விமானம் : அதிர்ச்சி வீடியோ

ரோட்டில் சென்ற காரின் மீது மோதிய விமானம் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லிவர்மோர் நகரில் விமான நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விமானம் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமான நிலையம் அருகே அமைந்துள்ள 580 இன்டெர்ஸ்டேட்   என்ற சாலையை அடைந்து விமானம் புறப்படுவதற்கு முன் தரையிறங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை இணையாக உள்ளது. அங்கு ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரணை முடியும் வரை மூடி உள்ளதாகவும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு விபத்து ஏற்பட்டு வரும் போலீஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் சம்பவ இடத்தில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், அங்கு விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Exit mobile version