புலியை பேசியே கோபப்படுத்திய படமெடுத்த மக்கள் வனத்துறை அதிகாரி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஒடிசா கேடரில் பணியாற்றும் இந்திய வன சேவை (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி சுசந்தா நந்தா, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், திடீரென்று ஒரு புலி, சுவர் மீது குதித்து அதன் மேல் நடந்து செல்வது போன்றும், அதனை மக்கள் சத்தமாக பேசியபடியே மிக அருகில் நின்று படமெடுப்பது போன்றும் உள்ள வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். அதிர்ஷ்டவசமாக புலி யாரையும் எதுவும் செய்யவில்லை.
மக்கள் நிற்கும் இடத்திற்கு அருகே, புலி வேகமாக தாவியவுடன் படபடப்பு அடைந்த மக்கள் அதிர்ச்சி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஐஎஃப்எஸ் அதிகாரி பகிர்ந்த அந்த வீடியோவுக்கான தலைப்பில் :
“முட்டாள்கள்.. மனித மூளை மூடும்போது, வாய் பேசிக் கொண்டே இருக்கும். புலியின் கோப நிர்வாகத்தை பாராட்டுங்கள். ஆனால் எதிர்காலத்தில் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.