லாக்டவுன் முடிந்து கடை திறந்ததால் இப்படி ஒரு அதிரடி ஆஃப்ரா… குவிந்த கூட்டத்தால் சீல் வைத்த கடை.

சென்னையில் துணிக்கடை ஒன்றின் முன் மக்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் அங்கு தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையிலும் கூட லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்து இருக்கிறது.தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இவையே மக்களுக்கு பீதியை கிளப்பி வருகிறது. இப்படி கேஸ் ஏறிவரும் நிலையில் இப்படி தளர்வுகள் செய்துள்ளனரே என்று.

புதிதாக கடை திறக்கப்பட்ட நிலையில், மக்களை கவரும் வகையில் நிறைய அதிரடி ஆபர்கள் போடப்பட்டது. உதாரணமாக ஒரு பேண்ட் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜீன்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டி சர்ட் 8 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பல்வேறு விலைகளில் துணிகள் ஆபரில் விற்கப்பட்டது. அதிலும் 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் நிறைய துணிகள் விற்கப்பட்டது.

இப்படி அதிரடி சலுகைகள் கொடுத்த காரணத்தால் காலையிலேயே அந்த கடை முன் மக்கள் கூட்டம் குவிந்தது இதனால் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீஸார் அங்கிருந்த மக்களை கலைத்து. அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

Exit mobile version