ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியம் சட்டம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாலின சமத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாலின சமத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பணியிடத்தில் பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இப்படி இருந்த நிலையில் அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருவர்க்கும் ஒரே ஊதியம் தர வேண்டும் என நேற்று முதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை வெளியிட்ட அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நஹ்யான், வேலைவாய்ப்புச் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி கூறுகையில் இது ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுத்துவைக்கும் புதிய காலடி. சமத்துவம் மற்றும் நீதித்துறையில் இந்த சட்டம் மாற்றங்களை உருவாக்கும் என கூறியுள்ளார்.

Exit mobile version