வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம்-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்…

வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரட்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஒருவார அவகாசம் வழங்கியுள்ளது.

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அதை ரத்து செய்யக்கோரியும் கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந் தேதி விசாரணை நடைபெற்றது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவு அடங்கிய பிரமாண பத்திரம் அக்டோபர் 1-ந் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும்’ என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளித்ததுடன், வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதுகுறித்து சிறிய அளவிலான கடன் பெற்றவர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது.

2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வி கடன் பெற்றவர்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் புரிய 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற தனிநபர்கள், 2 கோடி ரூபாய் வரையிலான கன்ஸ்யூமர் கடன் பெற்றவர்கள், 2 கோடி ரூபாய் வரை கிரெடிட் கார்டு நிலுவை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை (வட்டிக்கு வட்டி வசூலிப்பது) தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது” இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாழைக்கு மறுபடியும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. திகில் ஒரு வாரம் மத்திய அரசுக்கு நேரம் தரப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒரு வாரத்திற்குள் அணைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் வேண்டும் என கூறியுள்ளது.

Exit mobile version