பள்ளியில் படித்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை பயிற்சியாளர் கைது: 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் தற்போது சிக்கியுள்ளார்.

கோவை ராமநாதபுரம் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல் ஜெய்சங்கர். இவர் ஒரு திறன் மேம்பாட்டு பயிற்சியாளர். அதனால் அவர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பாடு வகுப்புகள் எடுப்பது வழக்கம். அதேபோல் இவர் 2011 ஆண்டு கோவை போத்தனூரில் ஒரு பள்ளியில் தரின் மேம்பாடு பயிற்சி அளித்துள்ளார். அப்போது அங்கு எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவியின் செல்போன் நம்பர் வாங்கி அந்த பெண்ணிற்கு அடிக்கடி மெசேஜ் செய்து வந்துள்ளார்.

கடந்த 2016 வரை சாமுவேல் ஜெய்சங்கர் மாணவிக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். தற்போது அந்த மாணவி கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் இருக்கின்றார். மேலும் சாமுவேல் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் இருந்த மாணவி நேற்று முன்தினம் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் சாமுவேல் ஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலூரில் திறன் மேம்பாடு பயிச்சி அளிக்க சென்றபோது அங்கும் ஒரு மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வந்த நிலையில், சாமுவேல் ஜெய்சங்கர் கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version