திருச்சி காவலர் பயிற்சி கல்லூரியில் பயின்ற திருநங்கை தற்கொலை முயற்சி…

திருச்சி காவலர் பயிற்சி கல்லூரியில் பயின்ற திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி கல்லுரியில் பயின்று வந்த மாணவி சமீபத்தில் காவலராக தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பெண் காவலர் பயிற்சி கல்லூரியில் இவர் பயின்று வந்துள்ளார்.

இந்தநிலையில் காவலர் பயிற்சி கல்லூரி முதல்வர், துணை முதல்வரால் அந்த திருநங்கை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் கல்லுரி டி.ஐ.ஜி. அவர்களிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் நவல்பட்டில் உள்ள கல்லூரிக்கு வந்து முதல்வர், துணைமுதல்வர் மற்றும் திருநங்கையிடம் நேரடியாக விசாரணை நடத்தியுள்ளார்.

இவ்வாறு போலீசார் வந்து விசாரணை செய்ததால் அங்குஉள்ள சப் – இன்ஸ்பெக்டர் அவரை தொல்லைசெய்ததாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள துணிந்துள்ளார். பின்னர் கடந்த 9ந்தேதி காலை விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பின்னர் திருநங்கையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Exit mobile version