இந்திய ஆட்சிப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாளை நடக்கிறது. இதில் தேர்வு எழுதுபவர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதற்கு மொத்தம் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த இந்த தேர்வில் இப்போது 7 லட்சம் பேர் எழுத உள்ளனர். இப்போது முதல் கட்ட தேர்வில் வெற்றிபெறுபவர்கள் பின்பு முதன்மை தேர்வில் பங்கேற்பாற்பர்கள்.
இந்நிலையில் அதில் 900 லிருந்து 1000 பேர் வரை ஆட்சிப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான முதல்நிலைத் தேர்வு நாளை (அக்.04) இந்தியா முழுவதும் நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் நாளை எழுத உள்ளனர். இந்தத் தேர்வு மே 31 அன்று நடக்க வேண்டியது.
இந்த கொரோனவால் நாளை நடவிருக்கின்றது. காலை 9.30 மணி முதல் 11.30 மணிவரை முதல் ஒரு தேர்வு, மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாவது தேர்வு நடக்க போகின்றது. கோவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களில் ஒரு மேஜைக்கு ஒருவர் என அமரவைக்க போகின்றன. முதல்நிலைத் தேர்வு கடுமையான ஒரு தேர்வு ஆகும். தவறாகப் பதில் அளித்தால் அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்படும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ( இ-டிக்கெட்) தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பித்துள்ள யூபிஎஸ்சி இணையதளத்திலிருந்து பிரிண்ட் எடுத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் பல விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன.