முறைகேடாக வாகனம் நிறுத்துவதால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு…

முறைகேடாக வாகனம் நிறுத்துவதால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ராதாபுரம் கிழக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதியில் சாலை ஓரத்தில் நிரந்தரமாக இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப் படுகிறது.

தற்போது அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இயக்கப்படுவதால் பேருந்துகள் வரும்பொழுது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் சாலையோர கடைகளுக்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும், அங்கு போகவர இருக்கும் பேருந்து மற்றும் பல இரு சக்கர,மூன்று சக்கர வாகனங்களுக்கும் இடையூறாக இருக்கின்றது.

இதைகுறித்து அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், உடனடியாக காவல் துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தெற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதி போக்குவரத்து களை அடிக்கடி ரோந்து வந்து சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.

Exit mobile version