தீக்குழம்பு கக்கும் ஐஸ்லாந்து எரிமலைக்கு முன்னர் அசால்ட்டாக வாலிபால் விளையாடிய இளைஞர்கள் : வைரல் வீடியோ…!!

தீக்குழம்பு கக்கும் ஐஸ்லாந்து எரிமலைக்கு முன்னர் அசால்ட்டாக வாலிபால் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் இந்த எரிமலை கடந்த 19 ஆம் தேதியன்று திடீரென வெடித்தது. அந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த எரிமலை வெடிக்க காரணம் என தெரிகிறது.

ஐஸ்லாந்து நாட்டில் தீக்குழம்புகளை கக்கும் எரிமலைக்கு முன்னதாக இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து வாலிபால் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பலரும் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர். அவர்கள் வாலிபால் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பின்பக்கம் அந்த எரிமலை தீக்குழம்புகளை கொப்பளித்து கொண்டிருக்கிறது. சில மக்கள் அந்த எரிமலைக்கு முன்னர் செல்பி எடுத்தும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Exit mobile version