நாய்க்கு நேர்ந்த கொடூரம் வீடியோ பதிவாக வெளியானது… அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்!!

கோவையில் வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கிய நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை சரமாரியாக குச்சியால் தாக்கி வீட்டில் இருந்து விரட்டியடித்தார். அப்பகுதி பொதுமக்கள் அவர் நாயை துன்புறுத்தும் காட்சிகளை செல்போனில் வீடியோவாக படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.

இதனையடுத்து, விலங்குகள் நல சங்க நிர்வாகி மினி வாசுதேவன், நேரில் சென்று அவரிடம் விளக்கம் கேட்டபோது, மாரிமுத்து அவரையும் கெட்ட வார்த்தைகளில் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. மினி வாசுதேவன் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version