ஆபாச மெசேஜ் அனுப்பிய மேனேஜரை கட்டையால் அடித்து தண்டித்த பெண்… வைரல் வீடியோ…!!

ஆபாச மெசேஜ் அனுப்பிய மேனேஜரை கட்டையால் அடித்து தண்டித்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடக்கிழக்கு சீனாவில் ஒரு அரசாங்க அலுவலக ஊழியர் தனது முதலாளி துன்புறுத்தியதை அடுத்து சோர்வடைந்து அவரை துடைப்பத்தால் அடித்துள்ளார். மேலும் புத்தகங்களையும் தண்ணீரையும் அவர் மேல் வீசியுள்ளார். அந்த முதலாளி அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது. 14 நிமிடம் உள்ள இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் அந்த முதலாளி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அந்த பெண்ணின் இறுதி பெயர் ஜாவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த வீடியோவின் முடிவில் அவர் தனது முதலாளியின் கணினியை கவிழ்ப்பதை காணலாம். கடந்த வாரம் அந்த பெண் போலீசில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. சீனாவில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் அதிகமாகி வருகிறது. மேலும் வீடியோவை பார்த்த பலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். சீன பெண்ணிய ஆய்வாளரான லு பின் இதுக்குறித்து கூறும்போது “பாலியல் துன்புறுபவர்களுக்கு நீதிமன்றங்கள் சரியான சட்டத்தை உருவாக்காத நிலையில் பெண்களின் கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது” என்று அவர் கூறினார்.

சீன அரசு ஊடகங்களின் தகவல்படி, அந்த வீடியோவில் உள்ள ஆண் நபர் சுஹூவாவின் பெய்லின் மாவட்டத்தில் ஒரு அரசாங்க வறுமை ஒழிப்பு நிறுவனத்தில் துணை இயக்குனராக இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை தொடர்ந்து அவர் மேல் விசாரணை நடத்தப்பட்டு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version