பாம்புக்கு தண்ணீரை குடிப்பதற்கு கொடுக்கும் வினோத மனிதரின் வைரலாகும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள் பார்ப்பதற்கே மிகவும் சிறிய உருவமான இந்த பாம்பு தான் பலரையும் கதி கலங்க வைக்கிறது. கொடிய விஷத்தை கக்கும் இது மனிதர்களை தீண்டும் போது கொடிய விஷத்தை மனிதர்களுக்குள் இறக்கி விடும் என்பதால் பலரும் இதை கண்டு பயப்படுவார்கள். ஆனால் எவ்வித பயமுமின்றி அசால்டாக கிங் கோப்ரா பாம்பு ஒன்றுக்கு பாட்டிலில் ஒருவர் தண்ணி கொடுக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.
தாகத்தில் தவித்த அந்த பாம்பு, தண்ணீரை பருகுவதை வீடியோவில் காணலாம். இந்த வீடியோவை, இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ஒரே நாளில் 22,200 பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உண்மையில் என் உடல் சிலிர்க்கிறது என்று ஒரு யூசர் கருத்து தெரிவித்தார். இதுவரை பாம்பு தண்ணீர் குடிக்கும் என்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என்றும் சிலர் கருத்துக்களை போஸ்ட் செய்து வருகின்றனர். இந்த அதி பயங்கரமான வீடியோவை பகிர்ந்ததற்காக வன அதிகாரிக்கு ஒரு தேங்க்ஸ் என்று மற்றொரு யூசர் கமெண்ட் செய்திருந்தார். அந்த மனிதர் உட்கார்ந்து கொண்டு அந்த பாம்பிற்கு தண்ணீரை கொடுப்பதை கண்டால் எனக்கு பயமாய் இருக்கிறது என்று ஒரு யூசர் கருத்து தெரிவித்துள்ளார்.
சுசாந்தா நந்தா கடந்த 2020ம் ஆண்டும் இதுபோல் பாம்பு ஒன்று தண்ணீர் குடிக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் பச்சை பாம்பு ஒன்று, மனிதனின் கையில் இருக்கும் தண்ணீரை குடிக்கிறது. அந்த வீடியோவும் வைரலாகி இருந்தது. அந்த வீடியோவில் சுசாந்தா நந்தா பாம்பு தண்ணீரை எவ்வாறு குடிக்கிறது என்றும், பாம்புகள் தண்ணீர் குடிக்க அதன் நாக்கு உதவாது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பாம்புகள் தனது தாடைகளை பயன்படுத்தியே தண்ணீரை உறிஞ்சி தனது உடலுக்குள் கொண்டு செல்கிறது என்பதையும் பச்சை பாம்பு மிகவும் லேசான விஷத்தை கொண்டது இந்த பாம்புகள் பெரும்பாலும் இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.