SeithiAlai

கன்னத்தில் அடித்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அறைந்த இளைஞர்… காவல்துறையினர் கொடுத்த அன்புப் பரிசு…

வாணியம்பாடி அருகே வாகனத் தணிக்கையின் போது வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அறைந்த இளைஞர், வாகனத்துடன் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் பஜார் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்ற வாகனத்தை காவல் துறையினர் நிற்குமாறு தடுத்துள்ளனர். ஆனால், நிற்காமல் சென்ற வாகன ஓட்டியை துரத்திச் சென்று பிடிக்க முயன்றபோது வாகன ஓட்டிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் காவலரை தாக்கிய மணிகண்டனை வாகனத்துடன் கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version