பழனியில் சர்வ சாதாரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலப் பிரச்சனையின் காரணத்தினால் தொழிலதிபர் நடராஜன் என்பவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுப்ரமணி மற்றும் பழனிச்சாமி ஆகியோரை நேற்று சுட்டார். இதனால் அந்த இருவரும் படுகாயம் அடைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருள் ஒருவரான பழனிசாமி சிகிச்சை பலனின்றி உழிறிந்தார். அதனை தொடர்ந்து அவருடைய நண்பரான சுப்ரமணியும் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளரான நடராஜன் என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தை கூறி நடராஜன் சரண் அடைந்து, துப்பாக்கியையும் ஒப்படைத்தார். பின்னர் அவரை கைது செய்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் துப்பாக்கி சூட்டில் பழனிசாமிக்கு வலதுபுற தொடையிலும், சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர் என தெரியவந்துள்ளது.
அவர்கள் மயங்கி விழுந்து கிடந்த இடத்தின் சுற்று வட்டாரத்தில் இருந்தவர்கள் அவர்களை பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.