தூக்கத்தில் கண்விழித்த கணவர்… காதல் மனைவி கொடுத்த மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன், உமாதேவி என்ற இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். உமாதேவிக்கு 16 வயது இருக்கும்போதே பாலகிருஷ்ணன் அவரை திருமணமும் செய்துள்ளார். இதனால் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு, சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார். உமாதேவிக்கு 18 வயது ஆன பின்பு இருவீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்ததோடு, தனியாக வீடு எடுத்து தங்கவும் வைத்துள்ளனர்.
பாலகிருஷ்ணன் கார்பென்டராக வேலை பார்த்துவந்த நிலையில், உமாதேவி வீட்டை கவனித்துவந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்படவே, வழக்கம் போன்று சம்பவத்தன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதோடு, பாலகிருஷ்ணன் தூங்க சென்றுள்ளார். அப்பொழுது திடீரென மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்விழித்து பார்த்த பாலகிருஷ்ணன் தானும் உளியை எடுத்து கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Read more : 14 வயது சிறுமியை அக்கா கணவர் உட்பட 11 பேர் செய்த கொடூர சம்பவம்..!!
இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதோடு, உமாதேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியும் வைத்ததோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.