நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களிலும் கூட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

அதனை தொடர்ந்து இன்று நீலகிரி,கோவை,தேனீ போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் சுற்று வட்டாரத்திலும் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருக்கின்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர். நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ., பந்தலூரில் 14 செ.மீ., பவானியில் 13 செ.மீ., வால்பாறையில் 12 செ.மீ. என மழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் வெப்பம் குறைந்து காணப்படுகிறது.

Exit mobile version