கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடி சலுகையை அறிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ரூ. 100 நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்றாட பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சியில் உள்ள பேக்கரி ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
அந்த பேக்கரியில் ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை திறப்புவிழா ஆஃபராக பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் அறிவித்துள்ளார். அங்கு ரூ. 600 முதல் ரூ. 1500 வரை பல்வேறு விதமான கேக்குகள் உள்ள நிலையில், இந்த கேக்குகளை வாங்குபவர்களுக்கு 1 லிட்டர் முதல் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது வாங்குபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.அதைக் கொண்டு குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம் இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு தருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய உரிமையாளர் சகாயராஜ் எங்களுடைய பேக்கரி கடை திறப்பின் போது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் சலுகை அறிவிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். அப்போது தான் மற்ற இலவசங்களை வழங்கி அவர்களுக்கு பெரிய அளவில் பயன் இருக்காது என எண்ணிக் கொண்டிருக்கையில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழலில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கொடுத்தால் என்ன என்று நினைத்து “ஒரு கிலோ கேட்கும் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்” என அறிவித்தோம். இந்த சலுகை ஒரு மாதம் வரை இருக்கும் எனவும் பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.